கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த அதிமுக முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் இபிஎஸ் அடுத்த முதல்வர் வேட்பாளர் என சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனால் கொதிப்படைந்த ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த முதல்வர் ஒபிஎஸ் என்றும் 2021ல் முதல்வர் வேட்பாளர் ஒபிஎஸ் என்ற வாசகங்களுடன் இன்று காலை போஸ்டர்களை ஒட்டினர். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இன்று காலை, ஒபிஎஸ் இல்லத்தில் கூடியதால் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பு தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது.
அதிமுகவில் அடுத்து என்ன என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்