பதவியை மீறி வென்ற பாசம்-பிரதமர் காலில் விழுந்த ஜனாதிபதி.

SHARE

உமாபதிகிருஷ்ணன்

இலங்கையை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மகிந்த ராஜபக்சே குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி,அவரது தம்பி கோத்தபய பாதுகாப்பு துறை அமைச்சர்,மற்றொரு தம்பியான பசில் ராஜபக்சே நிதித்துறை அமைச்சர்,மூத்த தம்பி சாமல் ராஜபக்சே சபாநாயகர்.

இப்படி பத்து ஆண்டுகளுக்கு மேல் முழு கட்டுப்பாட்டில் இலங்கை தீவை கையில் வைத்திருந்தது ராஜபக்சே குடும்பம்.

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த முறை ரணிலுக்கு வாக்களித்தனர்.ராஜபக்சே குடும்பம் மொத்தமும் அரசியல் அதிகாரத்தை இழந்து முடங்கியது.

தான் தலைவராக இருந்த கட்சி பொதுக்குழுவே ராஜபக்சேவை கட்சியில் இருந்து நீக்கியது.

இதனால்,சில காலம் வெளியில் வராமல் தனது சொந்த ஊருக்கு சென்று குடியேறினார் மகிந்த ராஜபக்சே.

ஆனால்,அரசியல் சானக்கியன் என இலங்கை மக்களால் பார்க்கப்பட்ட ரணில் ஆட்சியில் அந்நாடு பொருளாதாரத்தில் பின் தங்கியது. வளர்ச்சி இல்லாமல் பின்னடவை சந்தித்தது.

இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்சேவின் கை ஓங்கியது,

சிறிலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை 2016 துவங்கினார்.இது அவரது குடும்ப கட்சி என்றே சொல்லலாம்.இந்த கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி கொடியை நாட்டியுள்ளார் மகிந்த ராஜபக்சே.

இந்த முறை அவரது மகன் நாமல் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி யுள்ளார்.அவர் இந்த முறை அமைச்சராக வாய்ப்பு அதிகம் உள்ளது.

இலங்கை அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை தான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தம்பி கோத்தபய ராஜபக்சேவை களத்தில் இறக்கினார் மகிந்த. அவரும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.

தற்போதைய அரசியல் அமைப்பு சட்டப்படி பிரதமரை விட ஜனாதிபதிக்கு தான் அதிகாரம் அதிகம். இந்த நிலையில் மீண்டும் பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கே அதிகாரம் என்ற வகையில் சட்டத்தை மாற்ற மகிந்த முடிவு செய்துள்ளார்.

விரைவில் அதிகாரம் மூழுமையும் மகிந்த ராஜபக்சேவின் கைகளுக்கே வந்து விடும்.கடந்த காலங்களில் அமெரிக்க ஆதரவாளர் என கருதப்பட்ட கோத்தபய அதிகாரத்தில் இல்லாத போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அவரை சீனா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. ஏற்கனவே ராஜபக்சே சீன ஆதரவு நிலைபாடு கொண்டவர்.

இப்போது தம்பியும் முழுவதுமாக மாறி விட்டார். கோத்தபய இந்த முறை பிரச்சாரத்தின் போதும் முக்கிய நிகழ்வுகளின் போதும் வழக்கத்திற்கு மாறாக சிகப்பு சட்டை அணிவதை வழக்கமாக்கிகொண்டுள்ளது சீன ஆதரவு என சமிக்கை காட்டத்தான் என கருதப்படுகிறது.

எனவே அண்ணன் பிரதமர் தம்பி ஜனாதிபதி மகன் அமைச்சர் என்ற வகையில் மீண்டும் இலங்கை மகிந்த ராஜபக்சே குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது.

கடந்த கால ராஜபக்சேவின் ஆட்சியில் தான், நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்கு சென்றது என்பது சிங்கள மக்களின் கருத்து. இதனால் தான் சிங்கள மக்களின் நாயகனாக ராஜபக்சே இன்றும் வலம் வருகிறார்.

தனது அரசியல் ஆசான் என்ற வகையில் அண்ணன் மகிந்த ராஜபக்சேவின் காலில் விழுந்து வணங்கி, .அரசியல் சட்டப்படி அதிக அதிகாரம் படைத்தவர் என்ற போதும் ,எனது அதிகாரம் அண்ணனின் காலுக்கு கீழ் தான் என காட்டியிருக்கிறார் கோத்தபய.


SHARE

Related posts

Leave a Comment