கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்மநாபசுவாமி கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் அந்தக் கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது.
திருவனந்தபுரத்தை கடைசியாக ஆட்சி செய்த மன்னர் 1991ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி காலமானார்.
அதன் பிறகு கோயில் நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகம் தொடர்பான வழக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தது.
அதே நேரம், திருவனந்தபுரத்தில் கோயிலில் உள்ள பாதாள அறைகளை ஆய்வு செய்யும் பணிகள் நீதிபதிகள் முன்னிலையில் நடபெற்றது
கோயிலின் ரகசிய அறைகள் ஏ முதல் எப் வரை பிரிக்கப்பட்டன. அங்கிருந்த 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன.
தனி நிபுணர் குழுவை கொண்டு நீதிபதிகளின் நேரடி கண்காணிப்பில் நடந்த கணக்கெடுப்பில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் கண்டறியப்பட்டது.
மேலும் திறக்கப்படாத அறைகளில் இன்னும பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருக்கலாம் என கணிக்கப்பட்டது. அனால் அந்த அறைகள் திறக்கப்படவில்லை
இந்த நிலையில் ,பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமையில்லை என கடந்த 2011-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
கோயிலின் வழிபாடு முறைகளில் தலையிடுவதற்கும் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.