மலர்கொடி-மலேசிய செய்தியாளர்-
ஏர் ஏசியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 50 சதவிகித கட்டண கழிவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 4 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரையிலான உள்நாட்டு விமான பயணங்களுக்கு ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் இருவழி பாதையில் திரும்பும் கட்டணத்திற்கும் அந்த சலுகை வழங்கப்படுவதாகவும் ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது..
மலேசியாவில்,நிலமை சற்று சீராக இருப்பதால், பயணம் செய்ய விரும்பும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஏர் ஏசியா குழுமத்தின் விளம்பர பிரிவு தலைவர் அமான்டா வூ தெரிவித்துள்ளார்.
எனவே, வலுவான சந்தை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விமான நிறுவனம் தனது உள்நாட்டு விமான பயணங்களை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனம் 30 விழுக்காடுக்கும் அதிகமான விமான பயணங்களைத் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் மட்டும், 16 இடங்களுக்கு 600-க்கும் மேற்பட்ட வாராந்திர விமானப் பயணங்கள் பட்டியலிடப்படுள்ளதாகவும் அமான்டா குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் 70 விழுக்காடு தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியாவிற்கும் இடையிலான விமானங்கள் என்றும் கோத்தா கினாபாலு, குச்சிங், தவாவ் ஆகியவை முக்கிய இடங்களுக்கு விமான சேவை துவங்கும் எனவும் அவர் கூறினார். ஏர் ஏசியா தொடர்ந்து பெரும் சலுகைகளை அறிமுகப்படுத்துவதால், அனைவருமே மலிவு விலையில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அந்நிருவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..