உமாபதிகிருஷ்ணன்-
தமிழ் பாரம்பர்ய வைத்தியர் திருதணிகாச்சலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு விசாரனையில்,மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
மருத்துவர் திருதணிகாச்சலம், தமிழ் பாரம்பர்ய முறைப்படி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வருகிறார்.
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியபோது, இவர் அளித்த மருந்து பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது.
இது குறித்து நோயாளிகளே பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நேரடி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரிமாதம் சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவியபோது,இது ஏற்கனவே உள்ள வைரஸ் நோய் என்றும் இதில் சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது எனவும் அறிவித்தார்.
கொரோனாவிற்கு மருந்து உள்ளது அதை குணப்படுத்த முடியும் என டெல்லியில் உள்ள சீன தூதரக அதிகாரிகளை சந்தித்து தெரிவித்திருந்தார்.
அதே போல , முதன் முறையாக வாத சுர குடிநீர் நல்ல தடுப்பு மருந்து எனவும் அறிவித்தார்.
(அவர் அறிவிப்பதற்கு முன்பு சித்த மற்றும் இந்தியாவின் பாரம்பர்ய மற்றும் பட்டம் பெற்ற மருத்துவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை.
இந்திய அரசின் ஆயுஷ் அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதார துறை அமைச்சரை நேரில் சந்தித்து கொரோனாவிற்கு தன்னிடம் மருந்து உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் கொனாவிற்கு மாற்று மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்படாத நிலையில், சுவிஸ்,கனடா,ஜெர்மன்,இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இவரிடம் மருந்து கேட்க,அதனை இங்கிருந்து அனுப்பி வைத்தார் தணிகாச்சலம்.
இந்த மருந்தை பயண்படுத்தி பல குணமடைந்ததாக வீடியோக்கள் வெளியிட்டனர்.
இந்த நிலையில்,கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தாக மருத்துவர் திருதணிகாச்சலம் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ சான்றில்லாமல் மருத்துவம் பார்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதே காரணத்திற்காக அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது,தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் கொரோனா தடுப்பு மருந்து குறித்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும்,தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்..