பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

SHARE

பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிந்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.,விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், புதுடில்லியில் இன்று மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன்ரெட்டி பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண் சிங், ஆகியோர் கூட்டாக முதல்கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

1. தாராபுரம் – எல்.முருகன்
2. அரவக்குறிச்சி – அண்ணாமலை
3. காரைக்குடி – எச்.ராஜா
4. கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
5. ஆயிரம் விளக்கு – குஷ்பு
6. திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
7. நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி
8. துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்
9. திருவண்ணாமலை – எஸ்.தணிகைவேல்
10. திருக்கோவிலூர் – கலிவரதன்
11. மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி
12. திட்டக்குடி (தனி) – பெரியசாமி
13. திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்
14. மதுரை வடக்கு – டாக்டர் சரவணன்
15. விருதுநகர் – ஜி.பாண்டுரங்கன்
16. ராமநாதபுரம் – குப்புராம்
17. குளச்சல் – பி.ரமேஷ்

பா.ஜ., மேலிடம் இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக டாக்டர் சரவணன் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.,வாக உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவருக்கு திமுக ‛சீட்’ கொடுக்காததால், அதிருப்தி அடைந்த அவர் இன்று காலையில் தான் பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில், காலையில் கட்சியில் இணைந்த அவருக்கு மாலையில் வெளியான பட்டியலில் தேர்தலில் போட்டியிட உடனே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment