பிரதமர் போலி வலிமை வாய்ந்த உருவம்-அது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம் -ராகுல் காட்டம்

SHARE

பிரதமர் மோடி “போலி வலிமை வாய்ந்த உருவம்; என்பது  இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாகிவிட்டது என ராகுல் காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியா-சீனா எல்லை தகராறு தொடர்பாக பிரதமரை தாக்கி உள்ளார்.
“பிரதமர் ஆட்சிக்கு வருவதற்காக ஒரு போலி வலிமை வாய்ந்த உருவமாக தன்னை உருவாக்கினார். அது அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. அது இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாகி விட்டது என ராகுல் டுவீட் செய்துள்ளார்.
லடாக்கில் சீனா ராணுவம் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இன்று சீனர்கள் உலகை வடிவமைக்க முயற்சிக்கிறார்கள் என்றும்,இந்தியா சீனாவிற்கு இடையே
வெறுமனே ஒரு எல்லை பிரச்சினை அல்ல. எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால் (சீனர்கள்) இன்று நமது பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மனதில், அவர்கள் உலகத்தை வரைபடமாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் உலகை வடிவமைக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கான அளவுகோள் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment