மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 5,48,313 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 13,408 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இன்று ஒரேநாளில் இன்று மேலும் 344 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது அந்த மாநிலத்தில் 1,47,513 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
