இலங்கையின் மலையக பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருபவர் செந்தில் தொண்டமான்.
ஆளும் கூட்டனியில் அங்கம் வகிக்கும் இவர் பதுளை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை மேல் மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று துணை முதமைச்சராக இருந்தவர் செந்தில் தொண்டமான்.
மலையக பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீடு திட்டம்,மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான் கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேலாக மலையக பகுதிகளில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வருகிறார்.
இந்த முறை நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் செந்தில் தொண்டமான். அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.