கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை காரணமாக சென்னை நகரின்பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகள் லேசான மழைக்கே நீர் நிரம்பி காணப்படும். 2015 மழையின் போது ஆயிரக்கணக்கான வாகனங்கள் மழை நீரில் மூழ்கி வீணானது.இதை அடுத்து இந்த ஏரியா வாசிகளின் புதிய கண்டுபிடிப்பு தான் தங்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவது என்ற வழக்கம்.
இந்த வழக்கத்தின் படி, இந்த மழைக்கும் தாழ்வான இடங்களில் வசிப்போர் தங்கள் வாகனங்களை மேம்பாலத்தின் மேல் வரிசையாக பார்க் செய்துள்ளனர்.
- .