கேரள மாநிலம், தேவிகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜா, இரண்டாம் முறையாக நேற்று சபாநாயகர் முன்னிலையில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவர், கடந்த மே, 24ல் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், தமிழில் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தில் பிழை இருப்பதாக கண்டறியப்பட்டது. உறுதி மொழியின் இறுதியில், உளமாற உறுதியளிக்கிறேன் என்பதற்குப் பதில் உறுதியளிக்கிறேன் என முடித்துக் கொண்டார்.
இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் மீண்டும் பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் கேரள சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில், எம்.எல்.ஏ., ராஜா, மீண்டும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.