எமது மலேசிய செய்திகயாளர்
முன்னாள் நிதியமைச்சர் கைது நடந்தது என்ன-?
கொரோனா மிரட்டல் சற்று ஒய்ந்து வரும் நிலையில் மலேசியாவில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. நள்ளளிரவில் முன்னால் நிதியமைச்சர் சைது செய்யப்படகூடும் என அவரது இல்லத்தை பத்திரியாளர்கள் சூழ்ந்தனர். சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர் . இந்த தகவல் மலேசியா முழுவதும் காட்டு தீ போல் பரவியது.
கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் மலேசியாவை ஆண்டு வந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து வந்த வேளையில், கடந்த 2018 முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முகம்மது தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசிய முன்னணிக்கு பதில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க கடுமையாகப் போறாடியவர் என்ற பெருமை அவருக்குண்டு. இரண்டு ஆண்டு நம்பிக்கை கூட்டணியின் ஆட்சியை தொடர்ந்து தன் வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த புதிய அரசாங்கத்தின் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் செய்த சதியால், இந்த ஆட்சி நிலைக்காமல் பின் வாசன் ஆட்சியை கூடவே இருந்த இன்றைய புரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முன்னாள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆட்சிதை அமைதுக்கொண்டார்.பழைய ஆட்சியாளர்கள் மீண்டும் பதவிக்கு வந்தவுடனே,முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக இலஞ்ச ஊழல் என்று புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக அவர் மீது பல முறை விசாரணையை முடுக்கி விட்டனர்.அதன் விளைவே இன்றைய கைது நடவைக்கை என்று சொல்லப்படுகிறது.