மே மாதத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ஜி.எஸ்.டி. வருவாய்

SHARE

கொரோனா 2வது அலையால் நாடு திணறி வரும் சூழ்நிலையில், கடந்த மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இவற்றில், 17 ஆயிரத்து 592 கோடி மத்திய ஜி.எஸ்.டி.யாகவும், 22 ஆயிரத்து 653 கோடி மாநில ஜி.எஸ்.டி.யாகவும் கிடைத்துள்ளது.
இதுதவிர ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.53 ஆயிரத்து 199 கோடியாகவும், (சரக்குகள் இறக்குமதியில் கிடைத்த ரூ.26 ஆயிரத்து 2 கோடி உள்பட) மற்றும் செஸ் வரியில் கிடைத்த வருவாய் ரூ.9 ஆயிரத்து 265 கோடியாகவும் (சரக்குகள் இறக்குமதியில் கிடைத்த ரூ.868 கோடி உள்பட) உள்ளது.
இந்த மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆனது கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த தொகையை விட 65 சதவீதம் அதிகம் என்றும் நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கின்றது.


SHARE

Related posts

Leave a Comment