ரணில் படுதோல்வி -மீண்டும் ராஜபக்சே கைகளுக்கு சென்றது இலங்கை

SHARE

உமாபதிகிருஷ்ணன்

தேர்தல் கருத்து கணிப்பையும் விஞ்ஜி 145 இடங்களை கைப்பற்றி மீண்டும் இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே.

மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியை பெற 5 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் கூட்டணி கட்சிகளிடம் அந்த இடம் இருப்பதால், ராஜபக்சே எந்த சிக்கலும் இன்றி ஆட்சி கட்டிலில் அமர முடியும்.

வருகிற ஞாயிறன்று ராஜபக்சே பிரதமராக பதவியேற்பார் என அந்நாட்டு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட ராஜபக்சே,வரலாறு கானாத வகையில் 5 லட்சத்து27 ஆயிரத்து 364 வாக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபக்சே நாட்டின் அதிபராகவும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே ராணுவ அமைச்சராகவும் இருந்தனர்.

இந்த முறை அவரது சகோதரர் அதிபராகிவிட,ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரணில் படுதோல்வி

கடந்த முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே படதோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியடைந்த ரணில் இந்த முறை தான் போட்டியிட்ட தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு

கடந்த முறை 16 இடங்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வெறும் 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்று நாட்டின் எதிர்கட்சியாக அமர்ந்த போதும் வடக்கு மக்களுக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என்று மக்கள் அதிருப்தியில் இருந்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட கருணா தோல்வி

கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வினாயக மூர்த்தி என்கிற கருணா அம்மன் படுதோல்வியடைந்துள்ளார். இவர் ராஜபக்சேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் தோல்வி தான் அவருக்கு பரிசாக கிடைத்திருக்கிறது. இருந்த போதிலும் நம் நாட்டில் மேலவை எம்.பி என்பதை போல கருணாவுக்கு ராஜபக்சேவின் கருனை பார்வையின் மூலம் ஒரு இடம் கிடைக்க வாய்பிருக்கிறது.


SHARE

Related posts

Leave a Comment