கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
இந்த நிலையில், ரஷிய நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.
கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.
மேலும் அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருப்பதாகவும்,. புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி விற்பனை போட்டியில் அமெரிக்கா,ரஷ்யா இடையே பெரும் போட்டி நிலவும்நிலையில் இந்திய மருந்து அதற்கு முன்பாக சந்தைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.