மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லியை முற்றுகையிட்டு 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் இச்சட்டங்களை நிறுத்தி வைத்து, பிரச்னைகளை ஆராய குழு அமைத்துள்ளது. மத்திய அரசு 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
குழுவில் உள்ளவர்கள் சட்டத்தின் ஆதரவாளர்கள் என்றும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று டில்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணிக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிறு சிறு விவசாய சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் சபை என்ற பெயரில் ஒன்றிணைந்து நாசிக்கிலிருந்து 180 கி.மீ தூரம் உள்ள மும்பைக்கு சனிக்கிழமை பேரணி தொடங்கினர். இன்று இரவு அவர்கள் மும்பை வந்தடைந்தனர். பின்னர் ஆசாத் மைதானத்திலிருந்து நாளை பேரணி நடத்த உள்ளனர்.
இந்த பேரணியில் ஆளும் கட்சியில் அங்கும் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத்பவார் பங்கேற்பார் என கூறப்படுகிறது. முன்னதாக இவர் வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசைசரத்பவார் எச்சரித்திருந்தார். போராடும் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறினால் மத்திய அரசு விளைவுகளை சந்திக்கும் என்று கூறியிருந்தார். விவசாயிகளின் பொறுமையை சோதிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..