வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்குவதற்காகவே வங்கிகள் செயல் படுகின்றன. வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பணத்திற்கு வங்கிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என கேரள உயர் றீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து 2லட்சத்து 40 ஆயிரம் ருபாய் திருடப்பட்டதாகவும் ,அந்த பணத்திற்கு வங்கி பொருப்பேற்காது என, தான் கணக்கு வைத்திருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாடிக்கையாளர் பணத்திற்கு வங்கி தான் பொறுப்பு என தீர்பளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாடிக்கையாளர் பணத்திற்கு வங்கி தான் பொறுப்பேற்க வேண்டும் என தீர்பளித்துள்ளது. எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்தால் மட்டும் வாடிக்கையாளர் தனது பணத்தை காப்பாற்றி கொள்ள முடியமா என வங்கிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணம் திருடு போகாமல் தடுக்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வங்கிகள் தன் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.