விமான விபத்து – சில மணி நேரத்தில் சரியான தகவலை தந்த நியூஸ் ஏசியா.

SHARE

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடிற்கு வந்தது.


விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


இந்த விபத்து காரணமாக குறித்த விமானம் முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதை பார்க்கும் போது விமான ஓடு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமான இரண்டாக உடைந்திருக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த தகவலை விமானம் விபத்துக்குள்ளான சில மணி நேரத்திலேயே நியூஸ் ஏசியா செய்தியாளர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..


SHARE

Related posts

Leave a Comment