மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை – விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா மம்தாவுக்கு பாஜக.நெருக்கடி..!

SHARE

மேற்கு வங்க சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் இருந்து 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பும் விவகாரத்தில் அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு முற்றியது. 

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி என்பவர், தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் விலகினார்.திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.
தற்போது மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி ரத்தன்  சுக்லா ராஜினாமா செய்து உள்ளார்.சுக்லா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் அனுப்பியுள்ளார்.
ஹவுரா மாவட்டத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கவனித்து வந்த சுக்லா, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சுக்லா  மாநில ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ப்டன் ஆவார்.
 

இது குறித்து திரிணமுல் காங்., தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம். லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது ராஜினாமா கடிதத்தில், விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால் பதவியை ராஜினாமா செய்வதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, ஆனாலும், அவர் தொடர்ந்து கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.


SHARE

Related posts

Leave a Comment