மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகள் போல நடத்துவதாக சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
விவசாயிகளை டெல்லிக்குள் செல்ல அனுமதிக்காமல் இருப்பது வருத்தமானது . அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்த பயங்கரவாதிகள் போல நடத்தப்படுகிறார்கள். அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். வேளாண் சட்டங்கள் ஒரு பிரச்சினை மட்டுமே. மற்ற எல்லா கோரிக்கைகளும் கருணையுடன் பரிசீலனை செய்யப்பட வேண்டும். எல்லா மாநிலங்களும் சிறப்பாக இல்லை. எனவே அவர்களுக்கு உதவி செய்வது மத்திய அரசின் பொறுப்பு. என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்..