தமிழக பா.ஜ. தலைமையகத்தில் அந்த கட்சியின் தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசி உள்ளார். நாட்டில் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. மனுஸ்மிருதி உட்பட வேறு எதுவும் நடைமுறையில் இல்லை. நடைமுறையில் இல்லாத ஒன்றை தடை செய்ய கோருவது வேடிக்கையாக உள்ளது.
பெண்களை இழிவுப்படுத்துவோருக்கு ஸ்டாலின் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
”பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும்” என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் எச்சரித்தார்
முருகனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..