விவசாயிகளுக்கு 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது-மோடி

SHARE

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும் என அனைத்து விவசாயிகளிடமும் உறுதி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆப்டிகல் பைபர் இணைய சேவையை துவங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்காக விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார். தற்போதைய நேரத்தில் விவசாயத்துறைக்கு சீர்திருத்தம் தேவைப்படுகிறது. அதனை எனது அரசு கொண்டு வந்துள்ளது. விவசாய மண்டிக்களுக்கு எதிராக இந்த மசோதாவில் ஏதும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். மண்டிக்களை நவீனப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.


சிலருக்கு வேளாண் சீர்திருத்தம் பிடிப்பதில்லை. இதனால், வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை கொள்கை கண்டிப்பாக தொடரும் என விவசாயிகளிடம் உறுதி அளிக்கிறேன். கொரோனா காலத்தில், ரபி அறுவடை காலத்தில், கோதுமையை அரசு, சாதனை படைக்கும் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஆதார விலையாக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் ஆகும். வேளாண் மசோதா, விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment