சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், ‘உழைப்பாளி’ என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்த மருத்துவர் வீரபாபு நேற்று துவக்கினார். ‘இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்’ என, அவர் அறிவித்துள்ளார்.

டாக்டர்கள் அளிக்கும் பரிந்துரை சீட்டு அடிப்படையில், மருந்துகளை வாங்கி கொள்ளலாம். சித்தா மருந்துகள், மருத்துவமனை வளாகத்திலேயே கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூலி தொழிலாளி ஒருவர் ரிப்பன் வெட்டி வைத்து இந்த மருத்துவமனை சேவையை துவக்கி வைத்தார்.