துபாய் சர்வதேச விமான நிலைய முனையம் திறப்பு- இந்தியர்களுக்கு கடும் கட்டுப்பாடு

SHARE

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒன்றாவது முனையம், வியாழனன்று திறக்கப்படும் என அந்நாட்டு விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார்.

சர்வதேச போக்குவரத்து மையமான துபாய் விமான நிலையம், ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. அதன் சர்வதேச விமான நிலைய முனையம் ஒன்றில் பொதுத்தளம் டி அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.8 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகும். இந்நிலையில் நைஜீரியா, தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கான தடையை நீக்குவதாகவும், அங்கிருந்து நேரடி விமானங்கள் புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என நேற்று அறிவித்தனர்.

குறிப்பிட்ட இத்தகைய தளர்வுகள் காரணமாக வியாழன் முதல் ஒன்றாவது முனையம் இயங்கும். வெளிநாட்டு விமானங்களுக்கான முனையம் 2 மற்றும் 3-லிருந்து 40-க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் இப்போது படிப்படியாக மீண்டும் திறக்கப்பட உள்ள ஒன்றாவது முனையத்திற்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளனர். வருகை தருபவர்கள் கோவிட் நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வருகை தரும் இடத்திலும் பரிசோதனை நடக்கும். இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்கள் சோதனை முடிவுகளைப் பெறும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள்.

புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்தும் விமான சேவையை தொடங்கலாம் என கூறியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியேற்ற விசா வைத்திருக்கும் இந்தியர்கள், யு.ஏ.இ., அங்கீகரித்த கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெற்றிருந்தால் தான் நுழைய முடியும். குடியேற்ற விசா இல்லாதவர்கள் தடுப்பூசியே போட்டிருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு சென்றிருந்தால் நுழைய அனுமதி கிடையாது என்ற தடை இன்னமும் தொடர்கிறது.


SHARE

Related posts

Leave a Comment