அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23; பா.ஜ.,வுக்கு, 20; த.மா.கா.,வுக்கு ஆறு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இது தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகியவற்றுக்கு தலா, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., – பா.ஜ., தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளன. பத்மநாபபுரம் தொகுதி, இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. |