இந்தியாவில் மார்ச் – ஜூன் மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது பயணித்தவர்கள் உட்பட, 2020 மார்ச் – ஜூன் மாதங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக திரும்பினர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
29,415 உயிரிழப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொகுத்த தரவுகளின்படி, ஊரடங்கு காலத்தில் கால்நடையாக பயணித்தவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். தற்காலிகமாக கிடைக்கக் கூடிய தகவல்களின்படி, 2020 மார்ச் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் சாலைகளில் 81,385 விபத்துக்கள், 29,415 உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
எவ்வாறாயினும், ஊரடங்கு காலத்தில் சாலை விபத்துக்களில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அமைச்சகம் தனித்தனி தரவுகளை பராமரிக்கவில்லை.