25 லட்சத்தை தாண்டியது பாதித்தவர்கள் எண்ணிக்கை

SHARE

மராட்டியம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிக காணப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65,002 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 996 -பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  25,26,192 -ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49,036 .. கொரோனா தொற்று பாதிப்புடன்  6,61,595 – பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

18,08,936- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment