மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இங்குள்ள போரியா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே அவர்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், மாவோயிஸ்டுகள் 26 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.