27ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு

SHARE

ஜெயலலிதா நினைவிடத்தை வரும் 27 ம் தேதி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,சென்னை எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ம் தேதி காலை 11: 00 மணியளவில் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார். சட்டசபை தலைவர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment