உமாபதி கிருஷ்ணன்
உலகில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை தவிர பல நாடுகள் கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஏ-சிம்டமெடிக் என்ற வகை ஒன்றை பிரித்திருக்கிறார்கள் இவர்களுக்கு தொற்று இருப்பதே தெரியாது. ஆனால் அதுவாக போய்விடும் அதே நேரத்தில், சோதனை செய்தால் இவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவரும் என பல நாட்டு மருத்துவர்கள் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் சோதனை செய்யப்படுபவர்ளுக்கு மட்டும் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
குறிப்பாக விமானத்தில் வருபவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படும் போது இது பெரும்பாலும் அறியப்படுகிறது. ஆனால் சோதனை செய்யப்படாதவர்கள் கணக்கில் வருவதில்லை. அதே நேரம் இவர்களால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் சொல்கிறது.
ஒப்புக்கொண்ட அதிபர்
கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 10-வது இடத்தில் ஈரான் உள்ளது. அங்கு சுமார் 2.70 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி, சற்று முன்னர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான கூட்டத்தில் பேசும்போது, “ஈரானில் 2½ கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம். இனி வரும்மாதங்களில் 3 கோடியில் இருந்து 3½ கோடி வரையிலானவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படலாம்” என கூறினார். வெளியிடப்படாத அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசு புள்ளி விவரத்துக்கும், அதிபரின் தகவலுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து உடனடியாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிபரின் செய்தி தொடர்பாளர் மொய்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அதிபர் ரூஹானி மேற்கொள் காட்டிய சுகாதார அமைச்சக தகவல், ஈரானியர்கள் எந்த அளவில் வைரசுக்கு ஆளாகி இருக்கலாம் என்பதை காட்டுவதாகும்” என கூறி உள்ளார்.
அதாவது ஏ- சிம்டமெடிக் என உலகம் சொல்வதை எண்ணிக்கையுடன் சொல்லியுள்ளார் ஈரான் அதிபர்.
உண்மையை வெயிப்படையாக சொன்னதில் எந்த தவறும் இல்லை என்பது சர்வதேச அளவிலான உள்ள உண்மை விரும்பிகளின் கருத்தாக உள்ளது.
சீனா,கம்போடியா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழகம், கேரளா போன்ற பகுதிகளில் பாரம் பர்ய மருத்துவத்தை பலர் நாடுவதால் நோய் தொற்றில் இருந்து குணமடைவதாகவும்,நோய் பாதித்த பல லட்சம் பேர் அரசு சார் மருத்துவமனைகளுக்கோ சோதனைகளுக்கோ செல்லாத நிலையிலும் அவர்கள் குணமடைந்து விடுவதால் அந்த கணக்கு வெயிவருவதில்லை என்றும் பாரம்பர்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.