38 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. திட்டம்?

SHARE

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தற்போதே  அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  மாவட்ட வாரியாக தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 38- தொகுதிகளில்  போட்டியிட  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. தலைமைக்கு தமிழக பா.ஜ.க. அனுப்பியதாக தகவல்கள் கூறுகின்றன. 
சென்னையில் 6 தொகுதிகள் மற்ற மாவட்டங்களில் 32 தொகுதிகள் என மொத்தம் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தப் பட்டியலை அதிமுக தலைமைக்கு பாஜக தலைமை விரைவில் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment