சாத்தான் குளம் முன்னால் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர் உள்ளிட்ட 5 கொலை குற்றவாளிகள் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது இன்று காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அந்த 5 பேரையும் நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டடிருந்த சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது. இதன்படி, கொலை, தடயங்களை அழித்தல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த இரட்டை கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றம் வந்துள்ளனர்.