சென்னையில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்

SHARE

5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். அதையடுத்து, தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை நேற்று அறிமுகப்படுத்தியது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, பெங்களூர், மும்பை, பெங்களூரு, ஹதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் இன்றுமுதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 5ஜி மொபைல் வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும், சிம் கார்டை மாற்றாமல், 4ஜி கட்டணத்திலேயே 5 ஜி சேவையை பயன்டுத்தலாம்.

இண்டர்நெட் வேகம் 30லிருந்து 40 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஏர்டெல், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகரங்களிலும் ஏர்டெல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கும் வரும். மக்கள் 5ஜி சேவைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவும் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/State/airtel-5g-service-launched-in-chennai-808471

SHARE

Related posts

Leave a Comment