கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிர் பலி உயரவே சித்த மருத்துவம் மெல்ல முக்கியத்துவம் பெற துவங்கியது. முதலில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க துவங்கிய அரசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவம் பார்க்க கடந்த மாதம் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து சென்னையில் முதன் முறையாக 250 பேர் சிகிச்சை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சித்த மருத்துவ சிகிசையின் பலனாக அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்தனர். இதனை தொடர்ந்து பலர் இந்த மையத்தை நாடி சென்றனர்.
இன்றைய கணக்கின் படி 1021 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர். இன்னும் 320 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
இது வரை ஒரு உயிரழப்பு கூட ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து சித்த மருத்துவர்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியமிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனாவிற்கு மருந்தே கண்டறியப்படாத போதும், தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் பறித்து வரும் நிலையில்.நம்பிக்கை உள்ளோருக்கு மேலும் நம்பிக்கை ஊட்டி வருகிறது சித்த மருத்துவம்.