தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நடத்தவுள்ள ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என் நடிகர் சத்யராஜின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும் தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்ப்பதாக திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை, மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமளிப்பதாக உள்ளது என்று திவ்யா சத்யராஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச் சத்து மிக்க உணவை இலவசமாக வழங்குவதற்காக ‘மகிழ்மதி’ என்ற தொண்டு இயக்கத்தை தொடங்கி நடத்திவருகிறார்.
நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திவ்யா சத்யராஜ் ஏற்கனவே கடிதங்கள் எழுதியுள்ளார்.