அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்-பார்ட் 1 என பெயரிட்டு கவர்னரிடம் வழங்கியது திமுக.

SHARE

திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடம் அளித்துள்ளோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2018 ம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளில் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கவர்னரிடம் மனு அளித்தோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துகளை வாங்கி குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இதன் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

. முதல்வர், துணை முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட முடியும். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து பார்ட் ஒன் தான் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த பார்ட் -2 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment