குஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி

SHARE

ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட, ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிட்டதட்ட 3 டன் ஹெராயின் குஜராத்தில் பிடிபட்டு உள்ளது.


இந்த தகவலை தெரிவித்துள்ள வருவாய் புலனாய்வுத் துறையினர் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கனில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கனில் இருந்து ஏற்றப்பட்டு உள்ளன என்றனர்


SHARE

Related posts

Leave a Comment