ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500;க்கும் மேற்பட்ட ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் 60 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இது வரை தெரியவில்லை
ஆப்கன் ஈரான் எல்லையில் உள்ள பகுதி இஸ்லாம் குவாலா ,. அமெரிக்க அளித்துள்ள சிறப்பு சலுகை மூலம், இந்த வழியாக தான் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை ஆப்கன் இறக்குமதி செய்கிறது. தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ள பகுதி இது.
இந்த பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில், இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் ஏற்றிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 500 டிரக்குகள் எரிந்து நாசமாகியது சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இது தெரியவந்தது. இந்த தீவிபத்து காரணமாக ஈரானில் இருந்து வரும் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் ஆப்கனின் ஹீரட் நகரம் இருளில் மூழ்கியது. தீவிபத்து காரணமாக 50 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் ஓரிரு நாளில் தெரியவரும் என தெரிவித்த அதிகாரிகள், இழப்பானது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளைாக கூறியுள்ளனர்.
இந்த தீவிபத்து சம்பவத்தை பயன்படுத்தி, அங்கு இறக்குமதி செய்தும், ஏற்றுமதிக்காகவும் வைக்கப்பட்டிருந்த பொருட்களை திருடி சென்ற சம்பவமும் அரங்கேறியது.