இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக அதிகரிக்கும் காஸ் சிலிண்டர் விலை.ஒரே ஆண்டில் ஐந்து முறை உயர்த்தப்பட்ட அவலம்.

SHARE

 மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை கடந்த டிசம்ப 1ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 1ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710-க்கு விற்கப்பட உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5வது முறையாக விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக மே, ஜூன், ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களின் முதல் தேதியில் விலை ஏற்றம் ஆகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி ரூ.50 உயர்ந்து ரூ.660க்கு விற்பனையான சிலிண்டர் அடுத்த 15 நாளில் மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளன


SHARE

Related posts

Leave a Comment