இந்தியாவில் ’அகாசா ஏர்’ என்ற பெயரில் புதிதாக விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் செயல்பட முதற்கட்ட அனுமதியை மத்திய அரசு கடந்த மாதம் வழங்கியது. குறைந்த செலவில் விமான பயணத்தை வழங்கும் வகையில் இந்த ’அகாசா ஏர்’ செயல்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனத்திற்கு இந்தியாவின் கோடிஸ்வரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜூன்வாலா முதலீடு செய்துள்ளார். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட மார்வாரி இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னனி சேர் ப்ரோக்கர். பல தொழில்களில் முதலீடுகளை செய்யும் முதலீட்டாளர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் இந்த புதிய விமான நிறுவனம் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ’அகாசா ஏர்’ நிறுவனம் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து புதிதாக 72 ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.