வரலாற்றில் முதல்முறையாக தமிழக சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்.

SHARE

வரலாற்றில் முதல்முறையாக தமிழக சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தாக்கல் செய்தார்.


முழு தகவல்கள்

* சங்க இலக்கியங்களில் வேளாண்மை என்ற சொல், உதவி என்ற பொருளில் கையாளப்படுகிறது.
* மனித நாகரீகம் உயர்ந்தாலும், உணவின்றி வாழ முடியாது;  உழவர் நலன் இல்லாமல் உழவுத்தொழில் இல்லை.
* 18 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை அதிகாரிகளுடன் சேர்ந்து கேட்டறிந்தேன்
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன்.
* நிகர சாகுபடி பரப்பை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்


தரிசு நிலங்கள் பரிசு நிலங்களாக …
* தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்; 10 லட்சம் ஹெக்டர் இருபோக சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டராக அதிகரிக்கப்படும்”
* தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும்
* கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, ஆகிய துறைகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
விவசாயத்தில்  இளைஞர்கள் 
* படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக முப்பத்தி ஆறு மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
* பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
* உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
* அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்; இந்த திட்டம் 52.2 கோடி செலவில் ஒன்றிய – மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
பனை
* ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்
* ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை 
* பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
* பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.
* பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.
* ரூ. 3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.
சென்னையில் வேளாண் அருங்காட்சியகம்
* விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு  அமைக்கப்படும். 
* உள்ளூர் விவசாய தொழில் நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்
* வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்.
* சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்  
* சந்தை விலை குறையும்போது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை 
ஆதார விலை உயர்வு
* ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060 ஆகவும், சாதாரண ரகம் ரூ.2,015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.
* நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்
* நெல்லுக்கான ஆதார விலை உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.99.38 லட்சம் செலவாகும்
சிறுதானிய இயக்கம்
* சிறுதானிய இயக்கம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.12.44 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகள், பயிறு வகைகளை வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும் மானியம் அளித்து ஊக்கப்படுத்தப்படும்.
* மழை குறைவான பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி, சந்தைப்படுத்த வசதிகள் செய்யப்படும்
* திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.
* இத்திட்டம் ரூ.45 கோடி ஒன்றிய – மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் படும்.
* நடப்பாண்டில், துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்ற வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டம்.
* எண்ணெய் வித்துக்கள் திட்டத்திற்கு ரூ.25.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
மானியங்கள்
* குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்
* காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம். 
* அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம்.
* சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத  மானியம் (அல்லது) 2  லட்சம் ரூபாய் வழங்கப்படும்”
கரும்பு
* கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.
* கரும்பு உற்பத்திக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
உழவர் சந்தைகள்
* உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்
* கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 
* உழவர் சந்தைகளில்  கழிவுகளை உரமாக்கி ‘காய்கறி கழிவு உரம்’ விவசாயிகளுக்கு வழங்கப்படும்”  
* முதல் அமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் 114 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய – மாநில அரசுகளின்  நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* நீர் பற்றாக்குறையை போக்க நடப்பாண்டில் சொட்டுநீர் பாசன முறை 20 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்படும் 
* ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய 2 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
தென்னை திட்டம்
* தென்னை சாகுபடி திட்டத்திற்கு ரூ.10.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
* தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* தென்னை மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பல்லடுக்கு சாகுபடி விவசாய முறை மூலம் பயிர்கள் சாகுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* தென்னையில் உற்பத்தி திறனை அதிகரிக்க” ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்பு தொகுப்பு திட்டம்”
பண்ணைய திட்டம் 
* விவசாயிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க வேளாண் மண்டல குழு அமைக்கப்படும்
* விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கு நடப்பாண்டில் ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு
* விவசாயிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க வேளாண் மண்டல குழு அமைக்கப்படும்
* நடப்பாண்டில் 13,300 விவசாய குடும்பங்கள் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படும்
* கூட்டுப்பண்ணைய திட்டத்திற்கு ரூ.59.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
* ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5 லட்சம் வேளாண் இயந்திரங்கள் வாங்க மூலதன நிதியாக வழங்கப்படும்
* அண்ணா பண்ணை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.21.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
புவிசார் குறியீடு
* தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென தனி அமைப்பு ஒன்று வழங்கப்படும். 
* மீன்பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை,வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.
* தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
* தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.
கால்நடை
 * மீன் விற்பனை அங்காடிகளுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு.
* பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால்நடை நலம் மற்றும் நாட்டுகோழி இனப்பெருக்க பண்ணைக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு.
* கறவை மாடு வளர்ப்போரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க 14.28 கோடி ஒதுக்கீடு.
* அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7.07 கோடி ஒதுக்கீடு.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்
* பல்வேறு பயிர்களின் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் `நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ தொடங்கப்படும்.
* திருச்சி / நாகை வழித்தடம் வேளாண் தொழிற்சாலைக்காக பெருந்தடமாக அறிவிக்கப்படும்.
* வேளாண்மையில் தொழில் முனைவோரை ஈர்க்க தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் அமைக்கப்படும்.
சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்
 * விளைநிலம் வீட்டுமனைகள் ஆவதால் சாகுபடி பரப்பு குறைகிறது.
* 11.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரிக்க முடிவு.
* 60 சதவிகிதமாக இருக்கும் சாகுபடி பரப்பு 75 சதவிகிமாக உயர்த்தப்படும்.
* இருபோக சாகுபடி 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.
 வேளாண் உபகரணங்கள்
* ஏரி, குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை
* வேளாண் உபகரணங்கள் தொகுப்பு திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
* நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும் * விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கு நடப்பாண்டில் ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு
* பயிர் காப்பீடு திட்டத்தில் 2வது தவணையாக ரூ.1,248.98 கோடி விரைவில் விடுவிக்கப்படும்
* வட்டார அளவில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற செயலி, இணையதளம் ஆகியவற்றில் முன்பதிவு செய்ய நடவடிக்கை
* புதிய வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய ரூ.23.29 கோடி நிதி ஒதுக்கீடு
* கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு
* வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து டிரோன்கள் கொள்முதல்
* சிக்கன நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.982.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
* குறைந்த நீர் ஆதாரத்தை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் அறிமுகம்\\
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
* தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதலை அதிகப்படுத்தவும்,
* சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கவும்,
* மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதலை ஊக்கப்படுத்தவும்,
* கால்நடை விவசாயிகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும்,
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கவும்
* 280 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
பழப்பயிர்கள் 
* கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் ரூ.5 கோடி செலவில் பலாவிற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்
 *தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து சேவைகளும் செய்யப்படும்
* எலுமிச்சை, கற்றாழை, புதினா போன்ற மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
* பழப்பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
* 80 லட்சம் பழச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* பழப்பயிர்களுக்கான சாகுபடி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
* தோட்டக்கலை பயிர்களை அதிக பரப்பளவில் சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த பட்ஜெட் உரையை தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.34,220 கோடி


SHARE

Related posts

Leave a Comment