அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்-செப்.28-ல் கூடுகிறது

SHARE

செப். 28-ல் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடைபெறும் என இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது கட்சி தலைமை.

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் கட்சி மேலிடம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வரும் 28-ம் தேதி காலை 9.45 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு..க, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். இது தொடர்பாக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.கூட்டத்தில் அனைவவரும் தவறாமல் பங்றே்க வேண்டும். என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment