இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசின் பல திட்டங்களை அக்கட்சி எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.
சற்று முன்னர் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒபிஎஸ்,இபிஎஸ் மற்றும் முக்கிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் ஒற்றுமையை காத்து மீண்டும் ஆட்சி அமைப்போம் என அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் மத்திய அரசின் திட்டங்களான நீட் மற்று மொழி கொள்கைகள் குறித்து விமர்சிக்கப்ட்டது.
நீட் விவகாரத்தில் மாநில அரசின் உமையில் மத்திய அரசு தலையிடுகிறது எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.ஜீஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.இரு மொழி கொள்கை தான் அதிமுகவின் நிலைபாடு மொழி தினிப்பை ஏற்க முடியாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வு குழுவில் தமிழர்களை இடம் பெற செய்ய வேணடும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.