மூன்று வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்ததாக முதல்வர் இபிஎஸ் விளக்கமளித்துள்ளார்,
நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவசாயம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மக்களவையில் மசோதாவை ஆதரித்த அதிமுக, மாநிலங்கள் அவையில் எதிர்த்தது. அதிமுக எம்பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதாவை எதிர்த்துப் பேசினார். அதிமுக.,வின் இந்த இரட்டை நிலையை திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணிfள், கொரோனா தடுப்பு பற்றி முதலமைச்சர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,மூன்று வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு தெரிவித்தது என்றார். மாநிலங்கள் அவையில் வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்