2019ம் ஆண்டில், 14.41 கோடி பயணிகள் பயணம் செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டில், 6.30 கோடி பேர் மட்டுமே விமான பயணம் செய்துள்ளனர். முழுமையான இரு மாத ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இருப்பினும், ஊரடங்கு தளர்வுகள் படிபடியாக அறிவிக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளும் அதிகரித்து, பயணியரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பரில் மட்டும், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போது, அதிக விமானங்கள் இயங்கத் துவங்கி இருப்பதால், வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள்ளாக, விமான போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் இன்னும் பழைய நிலைக்கு விமான போக்குவரத்து திரும்பவில்லைஇஎன்ற போதிலும் மிக மோசமான நிலையில் இருந்து போக்குவரத்து மீண்டுள்ளது.
2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.