சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் மோட்டார் சைக்கிளில் சென்றுவந்தார்.
,ந்த நிலையில் ரஷியாவில் வலிமை படப்பிடிப்பை முடித்த அஜீத்,ரஷ்யா முழுவதும் 5,000 கிமீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் ரிலீசுக்கு பின் அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெவ்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வானிலை நிலைமைகளுடன் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள , அஜித் தனது மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக சமீபத்தில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்து இருந்தன.
தற்போது அந்த தகவல் வலுப்பெற்றுள்ளது.ஜனவரிக்கு பின்னர் அஜித் தனது பயணத்தை துவங்களாம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.