அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து புறநகர் ரெயில், அரசு ஊழியர்களுக்காக இயக்கப்பட்ட்ட்டது. பின்னர் அது கொஞ்சம் விரிவுபடுத்தப்பட்டது. எனினும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னையில் புற நகர் ரெயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார். முதல்வர் பழனிசாமி, ரெயில்சேவையை தொடங்குவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் அனைவரும் பயணிக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நெரிசல் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அனைத்து பயணிகளும் பயணம் செய்யலாம் என ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நெரிசல் நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
