அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் : மாஜி ஐ.பி.எஸ்., அதிகாரி பிரதீப் ஷர்மா கைது

SHARE

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரப்பட்ட கார் ஒன்று கண்டறியப்பட்டது.இந்த விவகாரத்தில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், பிரபல என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான பிரதீப் ஷர்மா உள்ளிட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, கடந்த பிப்ரவரி மாதம் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அடுத்த சில நாட்களில், கார் உரிமையாளர் மன்சுக் ஹிரன் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எஸ்.ஐ., சச்சின் வாஸே என்பவருக்கு கார் நிறுத்தப்பட்ட வகாரத்தில் நேரடி தொடர்பிருந்ததாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகி்ன்றனர். கடந்த மே மாதம் எஸ்.ஐ., சச்சின் வாஸே, பணியில் இருந்து , ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார்.

தொடர் விசாரணயைில், இந்த வழக்கில் இன்று முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பிரதீப் ஷர்மாவை தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் கைது செய்தனர். மும்பை அந்தேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இன்று அதிரடியாக ரெய்டு நடத்திய போலீசார் , பிரதீப் ஷர்மா மற்றொரு போலீஸ் அதிகாரி என இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூன் 28 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கைதான பிரதீப் ஷர்மா 59, 1983 ஐ.பி.எஸ்., கேடர் ஆவார். 100-க்கும் மேற்பட்ட கிரிமினல்களை என்கவுன்டர் மூலம் போட்டு தள்ளியதால் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என மும்பை போலீஸ்வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். மும்பை நிழல் உலகதாதாக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், பணிநீக்கம், சஸ்பெண்ட் போன்ற பல்வேறு வழக்குகளை சந்தித்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஒய்வு பெற்றார். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முன்னியில் அக்கட்சியில் இணைந்தார் . 2019-ம் சட்டசபை தேர்தலில் போட்டியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜெலட்டின் வெடிபொருளுடன் காரை நிறுத்திய விவகாரத்தில் பிரதீப் ஷர்மாவுக்கும் எஸ்.ஐ., சச்சின்வாஸேக்கும் தொடர்பிருப்பதாகவும் இதில் பிரதீப்ஷர்மா மூளையாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் பிரதீப் ஷர்மாவை கைது செய்தனர். இதையடுத்து அம்பானி விவகாரத்தில் மர்மம் இன்னும் நீண்டு கொண்டே போவதாக கூறப்படுகிறது.


SHARE

Related posts

Leave a Comment