பிரபலமான குரோர்பதி நிகழ்ச்சியின் 12-வது சீசன் படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் பங்கேற்று உள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கிய இந்த குரோர்பதி நிகழ்ச்சி 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இதன் 3-வது சீசனை மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். மற்ற அனைத்து சீசனையும் அமிதாப்பச்சனே தொகுத்து வழங்கினார்.
குரோர்பதி படப்பிடிப்பில் பங்கேற்றது குறித்து அமிதாப்பச்சன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மார்ச் மாதத்துக்கு பிறகு முதல் தடவையாக படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். தனிநபர் விலகல், முக கவசங்கள், கிரிமிநாசினி அனைத்தையும் வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்துகிறோம். படப்பிடிப்பில் முன்பிருந்த இணக்கமும், நட்பும் இல்லை. தேவையானால் மட்டும் பேசுகின்றனர். படப்பிடிப்பு அரங்கம் ஆராய்ச்சி நடக்கும் பரிசோதனை கூடம் போல் உள்ளது” என்று கூறிப்பிட்டுள்ளார்..