அமித்ஷாவிற்கு கடந்த ஆக., 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆக., 14ல் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். மீண்டும் ஆக., 18 ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களில் விடு திரும்பினார்..
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மீண்டும் தீவிர மூச்சு திணறல் ஏற்படவே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.